காஞ்சிபுரம்

அந்தமான் ஆளுநர் மாமல்லபுரம் வருகை

DIN


அந்தமான் ஆளுநர் டி.கே.ஜோஷி புதன்கிழமை மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்துக்கு வருகைதந்து பல்லவர் கால சிற்பக்கலைகளை கண்டு ரசித்தார்.
சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரத்துக்கு வந்த அந்தமான் ஆளுநர் டி.கே.ஜோஷி, அங்குள்ள பல்லவர் கால சிற்பங்களான கடற்கரைக் கோயில் , ஐந்து ரதம், அர்சுனன் தபசு, புலிக்குகை, வராக மண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்களைக் கண்டு ரசித்தார். 
அப்போது அவருக்கு சுற்றுலா வழிகாட்டி லட்சுமணன் பல்லவர் கால சிற்பங்களின் தன்மைகள், அது வடிவமைக்கப்பட்ட காலம், கலைநயம், சிறப்புகள் குறித்து விரிவாக விளக்கினார். 
முன்னதாக, அந்தமான் ஆளுநர் ஜோஷியை திருக்கழுகுன்றம் வட்டாட்சியர் என்.வரதராஜன், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் துவாரகநாத் சிங், வருவாய் அலுவலர் நாராயணன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வரவேற்றனர். 
மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் மற்றும் அந்தமான் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், போலீஸாரும் உடன் வந்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT