காஞ்சிபுரம்

வட்டாட்சியர் அலுவலகம் முன் குடிமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

DIN


கிராமங்களில் கடந்த 30 ஆண்டு காலமாக வசித்து வருபவர்களுக்கு குடிமனை கேட்டு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்ட வையாவூர், மாம்பட்டு, பழையனூர், கொளம்பாக்கம், ஜானகிபுரம், மொறப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 
அவர்களில் பலருக்கும் குடிமனைப் பட்டா என்ற சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது. ஒருசிலருக்கு மட்டும் மதுராந்தகம் வருவாய்த் துறையினர் பட்டா சான்றிதழை வழங்கி இருந்தாலும் அது கிராம அடங்கலில் பதிவு செய்யப்படாமல் உள்ளது. இதனால் அரசின் வீடு கட்டும் திட்டம், கழிவறை கட்டும் திட்டம் உள்ளிட்ட நலத் திட்டங்களைப் பெற முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 
இந்நிலையில், பட்டா இல்லாமல் பாதிக்கப்பட்டு வரும் கிராம மக்கள் தங்களுக்கு அரசு உடனடியாக இலவச பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.ராஜா 
தலைமை வகித்தார். 
விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.மோகனன், மதுராந்தகம் வட்டச் செயலர் வி.பொன்னுசாமி, வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலர் சசிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் டி.கிருஷ்ணராஜ், வட்டச் செயலர் தே.வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
போராட்டத்தை நிறைவு செய்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சி.பாஸ்கரன் சிறப்புரை ஆற்றினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT