காஞ்சிபுரம்

பதுக்கி வைத்து மது விற்பனை:  8 பெண்கள் உள்பட 39 பேர் கைது

DIN


தேர்தல் நடத்தை விதிகளை மீறி மது விற்பனை செய்த 8 பெண்கள் உள்பட 39 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 16,17,18 ஆகிய மூன்று நாள்களிலும் மது விற்பனை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. 
இதனால், முன்னதாக சிலர் மதுபாட்டில்களை வாங்கி வைத்து அதிக விலைக்கு  விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வந்த புகாரின்பேரில், போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். 
இதில், அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 460 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். சித்தாமூரில் 137 பாட்டில்களும், மதுராந்தகத்தில் 120 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 8 பெண்கள் உள்பட 39 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT