காஞ்சிபுரம்

தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

DIN


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி.எம்.வித்யா கேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவை 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. 
சூரக்குட்டையில் செயல்பட்டு வரும் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 166 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு தாளாளர் டி.லோகராஜ், முதன்மை முதல்வர் மங்கையர்க்கரசி, முதல்வர் திலகவதி ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
மதுராந்தகம் அய்யனார்கோவில் நகரில் செயல்பட்டு வரும் வி.எம்.வித்யா கேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 26 மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு முதல்வர் கிறிஸ்டோபர் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT