காஞ்சிபுரம்

கருங்குழி அம்மன் கோயிலில் முப்பெரும் தேவியர் வீதியுலா

DIN


மாமல்லபுரம் மீனவர்குப்பம் பகுதியில் உள்ள ஸ்ரீ கருங்குழி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி  ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை அம்மன் வீதியுலா  நடைபெற்றது. 
ஆடி உற்சவத்தையொட்டி கருங்குழியம்மன், துர்கையம்மன், கன்னியம்மன் ஆகிய முப்பெரும் தேவியர்கள் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்பித்த ஊர்வலம் திங்கள் கிழமை காலை வரை மாமல்லபுரம் கடற்கரைப் பகுதி, பேருந்து நிலையம், கங்கைகொண்டான்  மண்டபம்  உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. 
இதில் தேவனேரி, கொக்கிலமேடு, பூஞ்சேரி, கடம்பாடி, மணமை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகளும், மாமல்லபுரம் மீனவர் குப்பம் பகுதி பொதுமக்களும் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

SCROLL FOR NEXT