காஞ்சிபுரம்

அத்திவரதர் பெருவிழா: போலி அனுமதிச் சீட்டு விற்றதாக 11 பேர் கைது

DIN


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில்  நடந்த அத்திவரதர் பெருவிழாவில் போலி அனுமதிச் சீட்டு விற்றதாக 11 பேரை காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி ஆக. 17-ஆம் தேதி வரை 48 நாள்கள் நடைபெற்று, நிறைவுற்றது. விழாவில், அத்திவரதரை தரிசிக்க வி.ஐ.பி மற்றும் வி.வி.ஐ.பி. ஆகியோர்களுக்கு தனித் தனி அனுமதிச் சீட்டுகளை மாவட்ட நிர்வாகம் வழங்கியிருந்தது.
இதை போலியாக அச்சடித்து வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் செந்தில், ரமேஷ், அப்துல்காதர், பாலு,நவுசாத், அசோக், கலிவரதன் உள்ளிட்ட 7 பேர், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் தனசேகரன், பிலால், மற்றொரு பிலால், ஜரூத்தீன் உள்ளிட்ட 4 பேர் என மொத்தம் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT