காஞ்சிபுரம்

பாலமுருகன் கோயிலில் காவடி ஏந்தல்  விழா

DIN


மதுராந்தகம் அடுத்த கிளியாநகர் பாலமுருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, 54-ஆம் ஆண்டு காவடி ஏந்தல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் பாலமுருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் விதமாக உடலில் அலகு குத்தியும், காவடிகளைத் தோளில் ஏந்தியபடி,  அரோகரா கோஷம் முழங்க, மேளதாளத்துடன் ஊர்வலமாகச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. 
இதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை 108 சுமங்கலிப் பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாகச் சென்று பாலமுருகனுக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 
விழா ஏற்பாடுகளை, விழாக்குழுவினரும், கிராம மக்களும் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT