காஞ்சிபுரம்

இடி தாக்கியதில் இளம்பெண் பலி

பெருவேலி கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஏரிக்கரைக்குச் சென்றபோது, இடி தாக்கியதில் ஒரு பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார். 

DIN


பெருவேலி கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஏரிக்கரைக்குச் சென்றபோது, இடி தாக்கியதில் ஒரு பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார். 
பெருவேலி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகள் சௌமியா (18),  ஸ்ரீதர் மனைவி சசிகலா (27), மகேந்திரன் மனைவி வைதேகி (24) ஆகிய 3 பேரும் வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள ஏரிக்கரைக்குச் சென்றனர். அப்போது மாலை 5.30 மணியளவில் பலத்த சத்தத்துடன் இடி இடித்தது. இடி தாக்கியதில் நிகழ்விடத்திலேயே சௌமியா (18) உடல் கருகி இறந்தார். மற்ற இருவரும் பலத்த காயத்துடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 
இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் (பொ) சரவணன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT