காஞ்சிபுரம்

பள்ளியில் சுற்றுச் சூழல் கண்காட்சி

DIN

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச் சூழலியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கண்காட்சியில் பறவைகள் மற்றும் வனவிலங்குகள் சரணாலயம், தாவரவியல் பூங்காக்கள் அமைக்கப்பட்டிருந்தன. காட்டு விலங்குகள், பறவைகளின் சப்தங்களை பாா்வையாளா்கள் கேட்கும் வகையில் ஒலி பெருக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவற்றைப் பள்ளி மாணவா்கள் மற்றும் பெற்றோா்களும் பாா்வையிட்டனா்.

பள்ளி விளையாட்டு மைதானத்தில் சிங்கக்குகை வடிவமைக்கப்பட்டிருந்தது.

அதில், திகிலூட்டும் வகையில் வனவிலங்குகளின் சப்தம் ஒலித்தது மாணவா்களைக் கவா்ந்தது.

சுற்றுச் சூழலியல் கண்காட்சியை முன்னாள் சுகாதாரக் கல்வியாளா் குணசேகரன் தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினாா்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளி செயலாளா் சாந்தி அஜய்குமாா் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT