காஞ்சிபுரம்

அரசு மருந்தகத்திற்கு நிரந்தர பணியாளரை நியமிக்கக் கோரிக்கை

DIN


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு மருந்தகத்திற்கு நிரந்தரப் பணியாளரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வளாகத்தில் உள்ள அரசு மருந்தகத்தில் வாரத்தில் இரண்டு நாள்களுக்கு சித்த மருந்துகளும், ஒரு நாள் ஆங்கில மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது. 
குறிப்பிட்ட ஒரு சில மணிநேரங்களே பணியாளர்கள் இங்கு பணியில் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கோ அல்லது ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கோ திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள செவிலிமேடு அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்திற்கும், ரயில்வே சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
 இதனால் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட  ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் உள்ள அரசு மருந்தகத்திற்கு நிரந்தரப் பணியாளரை நியமிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT