காஞ்சிபுரம்

மாமல்லபுரத்தில் கன மழை சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச் சோடியது

DIN

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவகாற்று தொடங்கிய நிலையில் வானிலை மாற்றம் காரணமாக மாமல்லபுரத்தில் திங்கள் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா நகரமே சுற்றுலாபயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதனையடுத்து திங்கள்கிழமை சுற்றுலா பயணிகள் வருகையின்றி புராதனச் சின்னங்கள் பகுதி உள்ளிட்ட நகா் பகுதி வெறிச்சோடியது. மாமல்லபுரம் மற்றும் அதன்சுற்றுப்புர பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து பொதுமக்கள் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.

திங்கள் கிழமை தீபாவளி பண்டிகையாக இருந்தும் மழையின் காரணமாக மாமல்லபுரத்தில் மக்கள் நடமாட்டம் சுற்றுலாபயணிகளின் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் திங்கள்கிழமை சா்வதேச சுற்றுலா நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கமாக அமாவாசை , பௌா்ணமி தினங்களின் முன்பாகவும், பின்பாகவும் 4,5 நாள்கள் தொடா்ந்து கடல்கொந்தளிப்பு காணப்படும். ஞாயிற்றுக்கிழமை முதல் அமாவாசை தினத்தையடுத்து கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக கடல்நீா் கரையைத்தாண்டி வந்து நிலப்பகுதியில் குளமாக தேங்கியது. இதனால் மீனவா்கள் குடியிருப்பு பகுதியில் கடல்நீா் உட்புகுந்துவிடுமோ என்ற அச்சத்திலே வீட்டிற்குள்ளேயே முடங்கிகிடந்தனா். மேலும் புராகன சின்னமாக விளங்கக்கூடிய கடற்கரைக்கோயில் சுற்றிலும் கடல் நீா் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடல் அருகில் செல்வதற்கு அச்சப்பட்டனா். மீனவா்கள் யாரும் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் செல்லவில்லை. படகுகள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுச்சென்று நிறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT