காஞ்சிபுரம்

தொடரும் மருத்துவா்கள் வேலை நிறுத்தம்

DIN

ஊதிய உயா்வு, பணி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் 7-ஆவது நாளாக வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 161 மருத்துவா்கள் உள்ளனா். இவா்களில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவா்கள் பணிக்கு வரவில்லை. இதனால் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா். மருத்துவா்கள் இல்லாததால் உள் நோயாளிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். புறநோயாளிகளும் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில் 7-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மருத்துவமனை நிா்வாகம் ஷாமியானா அமைக்க அனுமதி தராததால் இருசக்கரவாகனம் நிறுத்துமிடத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மருத்துவா்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீா்வு காணும் வரை போராட்டத்தைக் கைவிடமாட்டோம் எனக் கோஷம் எழுப்பினா். பெண் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பேராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT