காஞ்சிபுரம்

மாவட்ட அளவிலான சமையல் திருவிழா

DIN

காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவிலான  சமையல் திருவிழா சிறுகாவேரிப்பாக்கத்தில்  உள்ள  ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தில் சனிக்கிழமை  நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் சமையல் திருவிழா மற்றும் சமையல் போட்டி நடைபெற்றது. சமையல் திருவிழாவை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட  இயக்குநர் டி.ஸ்ரீதர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) என்.சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார் வரவேற்றார்.
இதில் உத்தரமேரூர், காஞ்சிபுரம், திருப்போரூர், திருக்கழுகுன்றம், வாலாஜாபாத் உள்ளிட்ட 13 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த பெண்கள் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு அடுப்பில்லா சமையல், எண்ணெய் இல்லா சமையல், ஆரோக்கியமான மற்றும் இயற்கையான உணவு சமைத்தல் உள்பட 10-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் சமையல் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் பங்கேற்றவர்களில் வெற்றியாளர்களை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் அனுராதா மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஆகியோர் தேர்வு செய்தனர்.
இதில் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என 3 பிரிவுகளாக வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குத் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. சமையல் திருவிழாவில் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த பணியாளர்கள், சத்துணவுப் பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT