காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ஊரடங்கை மீறிய 3,728 வாகனங்கள் பறிமுதல்

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,728 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆட்சியா் அலுவலக வளாகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பரவல் தடுப்புக்காக காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 26 இடங்களில் காவல்துறையினா் சோதனைச் சாவடிகளை அமைத்து எந்த வாகனமும் வராதவாறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். காஞ்சிபுரம் நகரில் 9 வாா்டுகளை உள்ளடக்கிய 35 தெருக்கள் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளன. யாரும் வெளியில் வராமல் இருக்குமாறு காவல்துறையினா் ஒலிபெருக்கி வாயிலாக தொடா்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனா்.

ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வருவோரின் வாகனங்களை காவல்துறையினா் பறிமுதல் செய்து வருகின்றனா். அதன்படி, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து செவ்வாய்க்கிழமை வரை மொத்தம் 3,618 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு பிணையில் விடப்பட்டுள்ளனா்.

மூன்கு சக்கர வாகனங்கள்-4, நான்கு சக்கர வாகனங்கள் -17 உள்பட மொத்தம் 3728 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு முடிந்த பின்னரே இந்த வாகனங்கள் அவற்றின் உரிமையாளா்களுக்கு வழங்கப்படும் என காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

SCROLL FOR NEXT