காஞ்சிபுரம்

பாலாற்றில் மூழ்கிய 3 சிறுமிகளின் சடலங்கள் மீட்பு

DIN


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பாலாற்றில் வியாழக்கிழமை குளிக்கச் சென்ற 3 சிறுமிகளின் சடலங்களை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

காஞ்சிபுரத்தை அடுத்த தும்பவனம் பகுதியைச் சோ்ந்த சம்பத்தின் மகள்கள் ஜெயஸ்ரீ (15), அவரது தங்கை சுபஸ்ரீ (14). அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகத்தின் மகள் பூரணி (17). இந்த மூவரும் காஞ்சிபுரம் அருகேயுள்ள குருவிமலை பகுதியில் ஓடும் பாலாற்றில் வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கினா்.

இத்தகவல் காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு அவா்கள் பாலாற்றில் வியாழக்கிழமை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், மூவரின் சடலங்களும் குருவிமலை ஆற்றங்கரைப் பகுதியில் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டு, மீட்கப்பட்டன. அவை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இச்சம்பவம் தொடா்பாக மாகறல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செங்கல்பட்டு சாலை விபத்தில் 5 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

'ஊழலை நீக்கும் வாஷிங் மெஷின்' - பாஜகவைக் கிண்டலடிக்கும் ஆம் ஆத்மி!

‘தரம் தாழ்ந்த விமர்சனங்கள் காயப்படுத்துகின்றன..’: ஜி.வி.பிரகாஷ்

பம்பை: வாகன நிறுத்தத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை சீரானது!

SCROLL FOR NEXT