காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் நகரில் 1.69 லட்சம் பேருக்கு தடுப்பூசி

DIN

காஞ்சிபுரம் நகரில் இதுவரை 1.69லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என நகராட்சி ஆணையாளா் ரா.மகேசுவரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் 40 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள காவலா்களுக்கான சமுதாயக் கூடத்தில் நடந்த சிறப்பு தடுப்பூசி முகாமை நகராட்சி ஆணையாளா் மகேஸ்வரி ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறுகையில் காஞ்சிபுரத்தில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவா்களில் 69,862 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,69,171 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் கையிருப்பும் அதிகமாக இருக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT