வேதப்பிரகாஷ் 
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே தம்பி கொலை: அண்ணன் தலைமறைவு

காஞ்சிபுரம் அருகே களியனூரில் சனிக்கிழமை தம்பியை கொலை செய்து விட்டு அண்ணன் தலைமறைவானது தொடர்பாக வாலாஜாபாத் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து அண்ணனை தேடி வருகின்றனர்.

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே களியனூரில் சனிக்கிழமை தம்பியை கொலை செய்து விட்டு அண்ணன் தலைமறைவானது தொடர்பாக வாலாஜாபாத் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து அண்ணனை தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே களியனூரை சேர்ந்த கூலித்தொழிலாளி தட்சிணாமூர்த்தி. இவருக்கு லிங்கேசுவரன்(22), வேதப்பிரகாஷ்(18) என இரு மகன்கள் உள்ளனர். வேதப்பிரகாஷ் வெள்ளிக்கிழமை இரவு மது அருந்தி விட்டு வந்து தனது தாயாருடன் தகராறு செய்துள்ளார். கொலை வழக்கு ஒன்றிலும் 7-வது குற்றவாளியாக இருந்து வருகிறார்.

இதனை லிங்கேசுவரன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தம்பி வேதப்பிரகாஷ் தூங்கிக் கொண்டிருந்த போது அண்ணன் லிங்கேசுவரன் தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வாலாஜாபாத் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள லிங்கேசுவரனை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

SCROLL FOR NEXT