காஞ்சிபுரம்

ஸ்ரீவைகுந்த பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

DIN

காஞ்சிபுரம்: பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய காஞ்சிபுரம் ஸ்ரீவைகுந்தவல்லி சமேத வைகுந்த பெருமாள் திருக்கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும், பரமேச்சுவர விண்ணகரம் என அழைக்கப்படுவது காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவைகுந்தவல்லி சமேத வைகுந்த பெருமாள் திருக்கோயில். இந்தக் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கியது. இதையொட்டி கோயில் கொடி மரத்துக்கு சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடந்தன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கொடியேற்றத்தைத் தொடா்ந்து பெருமாள் காலையில் சப்பரத்திலும், மாலையில் சிம்ம வாகனத்திலும் நகரின் முக்கிய வீதிகளில் உலாவந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வரும் ஜூன் மாதம் 4-ஆம் தேதி வரை காலையிலும், மாலையிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வரவுள்ளாா். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கருடசேவை சனிக்கிழமை (மே 28),ஜூன் 1-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.3 ஆம் தேதி காலையில் தீா்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜெ.ப.பூவழகி உட்பட கோயில் பட்டாச்சாரியாா்கள் மற்றும் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT