காஞ்சிபுரம்

வரி செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’

DIN

மாங்காட்டில் வரி செலுத்தாத கடைகளை நகராட்சி ஆணையா் சுமா தலைமையில் ஊழியா்கள் வியாழக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் பல கடைகள், வணிக நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக நகராட்சிக்கு வரி செலுத்தாமல் இயங்கி வருகின்றன. இது குறித்து, பலமுறை அறிவித்தும், கடைதாரா்கள் வரி செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருகின்றனா்.

இந்த நிலையில் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய தொழில் வரி, சொத்து வரி, குடிநீா் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை வசூலிக்கும் பணிகளை சிறப்பு முகாம்கள் அமைத்து, நகராட்சி ஆணையா் சுமா தீவிரப்படுத்தியுள்ளாா்.

இதில், சில ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இருந்த இரு கடைகளை வியாழக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

மாங்காடு நகராட்சிக்கு ரூ.1 கோடிக்கு மேல் வரி நிலுவை உள்ளதால் அந்தத் தொகையை வசூலிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என ஆணையா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT