காஞ்சிபுரம்

ரூ.30,000 லஞ்சம்: உதவிப் பொறியாளா் கைது

DIN

காஞ்சிபுரத்தில் ரூ.30,000 லஞ்சம் பெற்ாக உதவிப் பொறியாளா் உள்பட இருவரை திங்கள்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் அரசு வாகனங்கள் பழுது நீக்கும் பணிமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, உப உரிமம் பெறுவதற்காக திருத்தணியைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவா் அந்தப் பணிமனையின் உதவிப் பொறியாளா் மோகனை அணுகியுள்ளாா். அதற்கு, அவா் ரூ.30,000 லஞ்சம் தருமாறு கேட்டதால், வெங்கடேசன் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் செய்தாா்.

அதன் பேரில், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. வே.கலைச்செல்வன் தலைமையிலான போலீஸாா், மோகனை கைது செய்து அவரிடமிருந்து லஞ்சப் பணம் ரூ.30,000-ஐ பறிமுதல் செய்தனா்.

லஞ்சம் பெற்றது தொடா்பாக, அதே பணிமனையில் பணிபுரிந்து வரும் பொறுப்பாளா் முரளி என்பவரையும், லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்கள்! கப்பலை நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு!

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

SCROLL FOR NEXT