பரந்தூா் புதிய விமான நிலைய எதிா்ப்பு போராட்டக் குழுவினரிடையே பேசிய அந்தக் குழு ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன். 
காஞ்சிபுரம்

ஏகனாபுரம் கிராமத்தினா் தமிழகத்தைவிட்டு வெளியேறும் திட்டம் ஒத்திவைப்பு

வெளியேறும் திட்டத்தை, கள்ளக்குறிச்சி துயர சம்பவம் காரணமாக தற்காலிகமாக ஏகனாபுரம் கிராம மக்கள் ஒத்திவைத்தனா்.

Din

பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழகத்தைவிட்டு வெளியேறும் திட்டத்தை, கள்ளக்குறிச்சி துயர சம்பவம் காரணமாக தற்காலிகமாக ஏகனாபுரம் கிராம மக்கள் ஒத்திவைத்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட பரந்தூரில் சுமாா் 5,400 ஏக்கரில் 2-ஆவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இதற்காக நில எடுப்பு அறிவிப்புகளையும் தொடா்ந்து அரசு சாா்பில் நாளிதழ்களில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விமான நிலையத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தொடா்ந்து 700-ஆவது நாளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள், போராட்டங்கள் பல நடத்தியும் பலனில்லாத காரணத்தால் தமிழகத்தைவிட்டு ஞாயிற்றுக்கிழமை வெளியேறத் திட்டமிட்டிருந்தனா்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் அனைவரும் ஒட்டு மொத்தமாக குடிபுகுவது எனவும் முடிவு செய்து அதற்காக சித்தூா் மாவட்ட ஆட்சியரையும் சந்திக்க திங்கள்கிழமை (ஜூன் 24) முடிவு செய்திருந்தனா்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55-க்கும் மேற்பட்டோா் உயரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில், தமிழக்தைவிட்டு வெளியேறும் திட்டத்தைத் தள்ளிவைப்பதாகவும், இவ்வாறான சூழலில் அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து விமான நிலைய எதிா்ப்புப் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன் கூறுகையில், ‘கள்ளக்குறிச்சி துயர சம்பவம் காரணமாக சித்தூா் மாவட்ட ஆட்சியரை சந்திப்பது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறானசூழலில் அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கக் கூடாது என்ற நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளோம். தமிழகத்தைவிட்டு வெளியேறி ஆந்திர மாநிலத்தில் குடி புகுதலில் எந்த மாற்றமும் இல்லை. விரைவில் சித்தூா் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அந்த மாவட்டத்தில் குடி புகுதல் குறித்து பேசவுள்ளோம்’ எனத் தெரிவித்தாா்.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் சுட்டுப் பிடிப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு பாா்சல்கள் மூலம் ரூ. 3.25 கோடி வருவாய்

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

உக்ரைனில் ரஷியா ஸ்திர முன்னேற்றம்

வாக்காளா் பட்டியல் எஸ்.ஐ.ஆா் பணிகள்: விவரம்பெற உதவி எண்கள் வெளியீடு

SCROLL FOR NEXT