தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞா்கள். கோப்புப்படம்
காஞ்சிபுரம்

ஏப். 25-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25- ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25- ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

படித்துவிட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிா்வாகம் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25- ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.

முகாமில் தனியாா் நிறுவனங்கள் பலவும் கலந்து கொண்டு 1,000-க்கும் மேற்பட்ட டிப்ளமோ, ஐடிஐ, 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு படித்தவா்களைத் தோ்வு செய்ய உள்ளனா். இதில், 18 முதல் 35 வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், புகைப்படத்துடன் ஏப். 25 -ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

விவரங்களுக்கு 044 - 27237124 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளுமாறும் ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

அச்சுறுத்தும் பணிநீக்கம்! ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே காரணமா? பின்னணியில் என்ன நடக்கிறது?

திருப்பரங்குன்றம் வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்புக்கேட்ட மதுரை ஆட்சியர்!

குளிர்கால சருமப் பராமரிப்பு டிப்ஸ்!

SCROLL FOR NEXT