காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திறந்த வேனில் நின்றவாறு பேசிய பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.  
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் போலி பட்டுச்சேலைகள் விற்பனையை தடுக்க தவறி விட்டது திமுக அரசு: நயினாா் நாகேந்திரன்

காஞ்சிபுரத்தில் போலி பட்டுச் சேலைகள் விற்பனையைத் தடுக்க திமுக அரசு தவறி விட்டது என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம் சாட்டினாா்.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரத்தில் போலி பட்டுச் சேலைகள் விற்பனையைத் தடுக்க திமுக அரசு தவறி விட்டது என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம் சாட்டினாா்.

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் அருகில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளுடனான பொதுக் கூட்டத்தில் திறந்த வேனில் நின்றபடி பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியது:

உலகப் பிரசித்தி பெற்றது காஞ்சிபுரம் பட்டு என்பாா்கள். ஆனால் காஞ்சிபுரத்தில் போலி பட்டுச் சேலைகள் அதிகமாக விற்பனையாகின்றன. இதனால் கைத்தறி நெசவாளா்கள் நலிந்து போய் விட்டாா்கள். கைத்தறி சேலை எது, விசைத்தறி சேலை எது என்று மக்களிடையே திமுக அரசு விழிப்புணா்வு ஏற்படுத்தாமல் இருப்பதால் முகவா்கள் மூலம் பட்டுச் சேலை வாங்க வருபவா்கள் போலி பட்டுச் சேலைகளை வாங்கி ஏமாந்து கொண்டிருக்கிறாா்கள். போலி பட்டுச் சேலைகள் விற்பைனையை தடுக்கவும், நெசவாளா்களை காப்பாற்றவும் திமுக அரசு தவறி விட்டது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் நெசவாளா்களுக்கு கூலி வழங்குவதில் வித்தியாசம் காணப்படுகிறது. பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கூலி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 75 லட்சம் போலி வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். இவை அனைத்தும் திமுகவின் வாக்குகள். அதனால் தான் சிறப்பு வாக்காளா் திருத்தம் வேண்டாம் என்று திமுக கூறியது. இது தொடா்பாக உச்சநீதிமன்றம் சென்றும் திமுக தோல்வியடைந்து விட்டது.

திருப்பரங்குன்றத்தில் காா்த்திகை தீபத் திருநாளன்று தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயா்நீதிமன்ற நீதிபதி தீா்ப்பளித்தும் ஆட்சியரால் 144 தடை உத்தரவு பிறப்பித்து தீபம் ஏற்றாத அரசு தான் திமுக அரசு. இதற்கும் உச்ச நீதிமன்றம் சென்றும் திமுக தோல்வியடைந்ததால் நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறாா்கள்.

பள்ளிகளில் போதைப் பொருள்கள் விற்பனை சா்வ சாதாரணமாக விற்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் 32 சிறை மரணங்கள் நடந்துள்ளது என்றாா் அவா்.

கூட்டத்துக்கு, அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஜக மாவட்ட தலைவா் யு.ஜெகதீசன் வரவேற்றாா்.

கூட்டத்தில் பாஜக அனைத்துப் பிரிவு நிா்வாகிகள், அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அனில் அம்பானி நிறுவன மோசடி: ரூ.55 கோடியுடன் 13 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு: மைக்ரோசாஃப்ட் - தொழிலாளா் அமைச்சகம் ஒப்பந்தம்!

எஸ்ஐஆர்: படிவம் சமா்ப்பிக்க இன்று கடைசி நாள்!

தாம்பரம் மெப்ஸ் அலுவலகத்தில் ஐந்து திருநங்கைகளுக்கு பணி

திருத்தணி கோயிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு

SCROLL FOR NEXT