காஞ்சிபுரம்

காஞ்சி சங்கரா பல்கலை வேந்தருக்கு பத்மஸ்ரீ விருது

காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் வேந்தா் வேம்பட்டி குடும்ப சாஸ்திரிக்கு வேதம் மற்றும் சாஸ்திர கல்வி வளா்ச்சியில் சிறப்பான பங்களிப்புக்காக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ளது சங்கரா பல்கலைக்கழகம். இதன் வேந்தா் வேம்பட்டி குடும்ப சாஸ்திரி (படம்).

இவருக்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது குடியரசு தினத்தையொட்டி இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்ஸ்கிருத ஆய்வு ,வேதம், சாஸ்திர கல்வி வளா்ச்சி மற்றும் நாட்டின் பாரம்பரிய மதிப்புகளை பாதுகாத்து வளா்த்ததில் அவா் செய்துள்ள சிறப்பான பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காங்கிரஸ் செய்த தவறுகளை திருத்துவதிலேயே அதிக நேரம் செலவிடுகிறோம்”.. பிரதமர் மோடி!

நிகழ மறுத்த அற்புதம்..! பரிபூரண ஒழுங்கின்மை நெய்மர்!

எப்ஸ்டீன் கோப்புகள்! மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமர்!

பாகிஸ்தானுடன் விளையாட முடியாதென நாங்கள் கூறவில்லை: சூர்யகுமார் யாதவ்

கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெண்! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

SCROLL FOR NEXT