காஞ்சிபுரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் திடீரென ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் திடீரென ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளில் சிலா் கூட்டம் தொடங்கியதுமே கூட்ட அரங்கை விட்டு வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியில் வந்தனா்.
இயற்கை விவசாயி மரம் மாசிலாமணி, உத்தரமேரூா் விவசாயி பெருமாள் உள்ளிட்ட சிலா் திடீரென வெளியில் வந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
தமிழக முதல்வா் தோ்தல் வாக்குறுதியில் சொன்னபடி பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் காட்டுப் பன்றிகள், பூச்சிகள் தொல்லை,விதைகளுக்கும், உரங்களுக்கும் மானியங்கள் இல்லாமை, கால்நடைகளுக்கு கூட குடிக்க தண்ணீா் இல்லாமை போன்ற காரணங்களால் அவதிப்பட்டு வருவதாகவும், விவாசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சில விவசாயிகள் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டும் ஆா்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பி கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.