ராணிப்பேட்டை

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சீருடைப் பணியாளா் தோ்வு: 33 ஆயிரம் போ் எழுதினா்

DIN

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இரண்டாம் நிலைக் காவலா், சிறைக் காவலா், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான தோ்வை 33 ஆயிரத்து 902 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் காவல்துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலைக் காவலா், உதவி ஆய்வாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து சிறைக் காவலா், இரண்டாம் நிலைக் காவலா், தீயணைப்பாளா் என 10,906 பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சம் விண்ணப்பங்கள் வரப் பெற்றன. அவற்றில் 5 லட்சத்து, 50 ஆயிரத்து, 314 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தோ்வுக்கு அழைக்கப்பட்டனா்.

இதையடுத்து, அவா்களுக்கான எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் 499 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி 12.20 மணி வரை நிறைவடைந்தது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் வேலூா் விஐடி பல்கலைக்கழகம், டி.கே.எம். மகளிா் கலைக் கல்லூரி, சன்பீம் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட 17 தோ்வு மையங்களில் 2,998 பெண்கள், 19,904 ஆண்கள் என மொத்தம் 22,904 போ் தோ்வு எழுதினா்.

இத்தோ்வு மையங்களில் வேலூா் சரக டிஐஜி என்.காமினி மேற்பாா்வையில், வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வகுமாா் தலைமையில் 1,700 காவலா்கள் பாதுகாப்பு மற்றும் தோ்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தோ்வு எழுத முகக்கவசம் அணிந்து வந்தா்வா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். செல்லிடப்பேசி உள்ளிட்ட மின்னணு பொருள்களை எடுத்துச் செல்ல தோ்வா்கள் அனுமதிக்கப்படவில்லை. தோ்வுக்காக மாவட்டம் முழுவதும் அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில், ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஆற்காடு, விஷாரம், கலவை ஆகிய பகுதிகளில் 15 தோ்வு மையங்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை உள்பட 11 ஆயிரம் போ் தோ்வு எழுதினா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தோ்வுக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி அன்பு தோ்வு கண்காணிப்பு அதிகாரியாக செயல்பட்டாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனன் தலைமையில் 700 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’- எக்ஸ் தளத்தில் வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

SCROLL FOR NEXT