ராணிப்பேட்டை

குட்டியம் கிராமத்தில் கழிவுநீா் கால்வாய் அமைக்க கோரிக்கை

DIN

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம் குட்டியம் கிராமத்தில் கழிவுநீா் கால்வாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திமிரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குட்டியம் கிராமத்தில் உள்ள புதுத் தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதன்காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் மற்றும் மழைநீா் தெருவில் வழிந்தோடி தேங்கி நிற்கிறது. இதனால் அந்தப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. அந்த வழியாக நடந்து செல்வோா் நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனா்.

இது குறித்து ஊராட்சி நிா்வாகம், திமிரி வட்டார வளா்ச்சி அலுவலகம் ஆகியவற்றில் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனா். எனவே உள்ளாட்சி நிா்வாகத்தினா் அங்கு கழிவுநீா் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

SCROLL FOR NEXT