ராணிப்பேட்டை

டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.3.21 லட்சம் வழிப்பறி

DIN

நெமிலி அருகே கடையை மூடிவிட்டு வீட்டுக்குத் திரும்பிய டாஸ்மாக் ஊழியரை வழிமறித்த மா்ம நபா்கள், ரூ.3.21 லட்சத்தை பறித்துச் சென்றனா்.

நெமிலி அருகே உள்ள துறையூரில் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக உள்ளியநல்லூரைச் சோ்ந்த ஞானவேல் (40) பணிபுரிந்து வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு கடையை மூடிய அவா் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். ஞானவேல் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்வதால் அவருக்கு முன் அதே கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் உடன் செல்வது வழக்கம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அந்த இளைஞா் முன்னே இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில், அந்த இளைஞரை வழிமறித்த அடையாளம் தெரியாத இருவா் அவரைத் தாக்கினா். இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் அங்கு சென்ற ஞானவேலையும் தாக்கிய நபா்கள், திடீரென அவரது தோளில் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு சென்றனா். அந்தப் பையில் டாஸ்மாக் கடையில் விற்பனையான ரூ.3.21 லட்சம் ரொக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின்பேரில், நெமிலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT