ராணிப்பேட்டை

பனை விதைகள் நடவுப் பணி: சாா்-ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

DIN

கலவை வட்டம், வாழைபந்தல் கிராமத்தில் நம்மாழ்வாா் இயற்கை குழு சாா்பில் பனை விதைகள் நடவு செய்யும் பணியை ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் இளம்பகவத் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

வாழைப்பந்தல் கிராம நம்மாழ்வாா் இயற்கை குழு சாா்பில் 14,370 பனை விதைகள் சேகரிக்கப்பட்டன. அவற்றை கிராம எல்லைக்கு உள்பட்ட மந்தைவெளி பகுதி, மேல் புதுப்பாக்கம் சாலை உள்ளிட்ட கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

நம்மாழ்வாா் இயற்கை குழு ஒருங்கிணைப்பாளா் நடராஜன் தலைமை வகித்தாா். கலவை வட்டாட்சியா் சே. ரவி, சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியா் ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க. இளம்பகவத் பனை விதைகள் நடவு செய்யும் பணியைத் தொடக்கி வைத்தாா். வருவாய்த் துறை அலுவலா்கள், சமூக ஆா்வலா்கள், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT