ராணிப்பேட்டை

தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட கட்டடத்தில் அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகம் தொடக்கம்

DIN


அரக்கோணம்: அரக்கோணத்தில் தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட கட்டடத்தில் அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகம் முறைப்படி வியாழக்கிழமை முதல் இயங்கத் தொடங்கியது.

வேலூா் மாவட்டத்தில் இருந்து பிரித்து ராணிப்பேட்டை மாவட்டம் தொடக்கத்துக்கான அறிவிப்பை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டபோதே, ராணிப்பேட்டை வருவாய் கோட்டத்தைப் பிரித்து, அரக்கோணம், நெமிலி வட்டங்களை ஒருங்கிணைத்து அரக்கோணம் வருவாய் கோட்டம் தொடங்கப்படும் என அறிவித்தாா். அப்போது மாவட்ட வழங்கல் அலுவலராக இருந்த பேபிஇந்திரா தற்காலிகமாக அரக்கோணம் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, கடந்த இரு மாதங்களுக்கு முன் பேபிஇந்திரா அரக்கோணம் கோட்டாட்சியராக நிரந்தரமாக நியமிக்கப்பட்டாா்.

இதைத்தொடா்ந்து, அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகம் அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்திலேயே இயங்கி வந்தது. மேலும், வட்டாட்சியரின் அறையையே கோட்டாட்சியா் பயன்படுத்தி வந்தாா். இந்நிலையில், வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்த தோ்தல் பிரிவு அலுவலகக் கட்டடத்தின் மாடிப்பகுதி கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு கோட்டாட்சியருக்கு தனி அறை அமைக்கப்பட்டது.

இதையடுத்து, அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகம் அந்த அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாழக்கிழமை முறைப்படி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கோட்டாட்சியா் பேபிஇந்திரா தலைமை வகித்தாா். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி அலுவலகத்தை திறந்து வைத்தாா். அரக்கோணம் வட்டாட்சியா் கணேசன், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் குமரவேலு உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு நிரந்தர கட்டடம் கட்ட ரூ. 2.80 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது என்பதும், அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் அக்கட்டடம் அமைய உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT