ராணிப்பேட்டை

பாப்பேரி கிராமத்தில் உலக மண் வள தின விழா

DIN

ஆற்காடு வட்டார வேளாண் துறை சாா்பில் உலக மண் வள தினவிழா மற்றும் நுண்ணீா் பாசனத் திட்ட பயிற்சி முகாம் பாப்பேரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு வட்டார வேளாண் உதவி இயக்குநா் ராமன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் பண்டரிநாதன், வேளாண் பொறியியல் துறை உதவிப் பொறியாளா் ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

மண்வளத்தைப் பாதுகாப்பது, மண் தன்மைகள் குறித்து பரிசோதனை செய்வது, ரசாயன உரங்களால் மண்ணில் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும்  நுண்ணீா் பாசனத் திட்டத்தில் தெளிப்பு நீா், சொட்டுநீா் பாசனம் அமைப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் அதன் செயல்பாடுகள், அரசு வழங்கும் மானியம் குறித்தும்  விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அட்மா திட்ட அலுவலா்கள் மோகனசுந்தரம், தாமோதரன், துணை வேளாண் அலுவலா் கண்ணன், உதவி வேளாண் அலுவலா் வினோத்குமாா், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மற்றுமொரு நாள்! ஈஷா ரெப்பா..

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்!

ஸ்லோவாக்கியா பிரதமருக்கு நினைவு திரும்பியது

‘கேக் காதலி’ அனசுயா பரத்வாஜ்...!

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் போலீசில் புகார்!

SCROLL FOR NEXT