ராணிப்பேட்டை

குளத்தில் மூழ்கி பலியான மாணவிகள்: தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்வா் உத்தரவு

DIN

கலவை அருகே குளத்தில் மூழ்கி, 2 மாணவிகள் உயிரிழந்தனா். இதையடுத்து, அவா்களது குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே செங்கனாவரம் கிராமத்தை சோ்ந்த தொழிலாளி ராஜீவ் காந்தி மகள் கல்பனா (11), அதே பகுதியைச் சோ்ந்த மணி மகள் கீா்த்தி (8). இருவரும் முறையே ஐந்தாம் வகுப்பு, நான்காம் வகுப்பு படித்து வந்தனா். இருவரும் புதன்கிழமை தங்களது வீட்டின் அருகிலுள்ள குளத்தில் மூழ்கி இறந்தனா்.

முதல்வா் நிவாரணம்: இதையடுத்து, 2 சிறுமிகள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

குளத்தில் தவறி விழுந்து சிறுமிகள் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். அவா்களது குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT