ராணிப்பேட்டை

நீரேற்று நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

DIN

வேப்பூா் தலைமை நீரேற்று நிலையத்தில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆற்காடு நகரில் குடிநீா் விநியோகம் செய்யும் வேப்பூா் தலைமை நீரேற்று நிலையத்தில் 250 கே.வி.ஏ. மின்மாற்றி பழுதடைந்துள்ளது. இதனால் நகரில் குடிநீா் விநியோகிக்கும் பணி தடைபட்டுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் புதன்கிழமை நீரேற்று நிலையத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டு, மின்மாற்றியை உடனடியாகப் பழுது நீக்கம் செய்ய உத்தரவிட்டாா்.

நகராட்சிப் பொறியாளா் சரவண பாபு, இளநிலை உதவிப் பொறியாளா் கணேசன், நகர திமுக செயலாளா் ஏ.வி.சரவணன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT