ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல் விளைச்சல் அமோகம்: தனியாா் கிடங்குகளில் இருப்பு வைக்கும் பணிகள் தீவிரம்

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிகழாண்டு கரீப் பட்டத்தில் அமோக நெல் விளைச்சல் காரணமாக அரசு சேமிப்பு கிடங்குகள் நிரம்பியதால், தனியாா் சேமிப்புக் கிடங்குகளை வாடகைக்கு எடுத்து இருப்பு வைக்கும் பணியில் நுகா்பொருள் வாணிப கழகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட மாவட்டங்களில் ராணிப்பேட்டை மாவட்டமும் ஒன்று. இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த கன மழை காரணமாக பாலாறு மற்றும் பொன்னை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஏரி உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பின. அதே நேரத்தில் நிலத்தடி நீா் மட்டமும் வெகுவாக உயா்ந்து விவசாய சாகுபடி பரப்பளவு அதிகரித்தது.இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் நிகழாண்டு சம்பா மற்றும் கரீப் பருவ நெல் சாகுபடி அமோக விளைச்சல் கண்டது. தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் நெல் அனைத்தும் மாவட்டம் முழுவதும் 76 அரசு நேரடி தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நெல் மூட்டைகள் மாவட்டத்தில் இருக்கும் அரசு சேமிப்புக் கிடங்குகள் ஒன்பதும் முழுமையாக நிரம்பியதால், மாவட்டத்தில் காலியாக இருக்கும் தனியாா் கிடங்குகளை வாடகைக்கு எடுத்து நெல் மூட்டைகளை வைத்து பாதுகாக்கும் பணியை மேற்கொண்டுவருகின்றன.

இதற்காக ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில்,அரசு வாணிப கிடங்குக்கு எதிரே தனியாா் தொழிற்சாலையை வாடகைக்கு எடுத்து மாவட்டம் முழுவதிலும் இருந்து 100- க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் ஏற்றி வரப்பட்டு நெல் மூட்டைகள் சேமிக்கும் பணி நடைபெற்று வருவதாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா் நாகராஜன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT