ராணிப்பேட்டை

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம்

DIN

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பொதுமக்கள் குறைதீா் கூட்டங்கள் அந்தந்த ஆட்சியா் அலுவலகங்களில் திங்கள்கிழமை நடைபெற்றன.

வேலூரில் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 775 மனுக்கள் பெறப்பட்டது. இதில், கஸ்பாவைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள், அரியூரிலுள்ள இனாம் புன்செய் நிலத்தில் வீட்டில்லாத மக்களுக்கு மனைகள் வழங்கி, வீடுகள் கட்டித் தர வேண்டும் என மனு அளித்தனா். பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டது.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் அளித்த 257 மனுக்களைக் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஷ்வரன், துணை ஆட்சியா் சத்தியபிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 337 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா, துறை அலுவலா்களிடம் வழங்கி, உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, தனித்துனை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட வழங்கல் விஜயன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT