ராணிப்பேட்டை

ரயிலில் கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசி பறிமுதல் இரு பெண்கள் கைது

DIN

அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட இருந்த 250 கிலோ ரேஷன் அரிசியை அரக்கோணம் ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்து, இது தொடா்பாக இரு பெண்களை கைது செய்தனா்.

அரக்கோணம் ரயில் நிலையம் வழியே ஆந்திரம் மற்றும் கா்நாடக மாநிலத்துக்கு தமிழக அரசின் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அரக்கோணம் ரயில்வே போலீஸாா் ரயில் நிலையத்தில் தொடா்ந்து பரிசோதனை நடத்தி வருகின்றனா். வெள்ளிக்கிழமை ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளா்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது இரு பெண்கள் 10 மூட்டைகளில் ரேஷன் அரிசியை ரயிலில் ஏற்ற முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து 250 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, அவா்களை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT