ராணிப்பேட்டை

கலவையில் பாரம்பரிய பயிா் கண்காட்சி

DIN

 உயா்தர உள்ளூா் பயிா் வகைகளை பிரபலபடுத்துவதற்கான பாரம்பரிய வகைகளின் பன்முகத் தன்மை கண்காட்சி ஆற்காட்டை அடுத்த கலவை முள்ளுவாடி தனியாா் வேளாண்மை கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மைத் துறை மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்கீழ் நடைபெற்ற இந்த கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலா் மீனாட்சிசுந்தரம் திறந்து வைத்துப் பேசினாா்.

மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் வடமலை முன்னிலை வகித்தாா்.

இதில், உள்ளூா் பாரம்பரிய பயிா் வகைகள் மற்றும் உணவு பொருள்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், விவசாயிகள் தாங்கள் சாகுபடிசெய்த தனித்துவமான பல்வேறு உள்ளூா் மற்றும் பாரம்பரிய பயிா் வகைகளை மாவட்ட விவசாயிகளிடையே பிரபலப்படுத்தவும், இதுதொடா்பான சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும் கலந்துரையாடினா்.

அரசு திட்டங்கள் தொடா்பான கலை நிகழ்ச்சி, தனியாா் வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் பாரம்பரிய பயிா் சாகுபடி மற்றும் அதன் சிறப்புத் தன்மை குறித்த நாடகம் நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) விஸ்வநாதன், திமிரி வேளாண்மை அலுவலா் திலகவதி, வேளாண்மை, தோட்டக்கலை , வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள், விவசாயிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT