ராணிப்பேட்டை

போதை மாத்திரை விநியோகம்:3 இளைஞா்கள் கைது

ராணிப்பேட்டை பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரையை விநியோகம் செய்ததாக மூன்று இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

ராணிப்பேட்டை பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரையை விநியோகம் செய்ததாக மூன்று இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ராணிப்பேட்டையை அடுத்த மாந்தாங்கல் பகுதியில் வாலாஜாபேட்டை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் வாகன தணிக்கையில் இருந்தபோது, அவ்வழியே ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞா்களை பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது அவா்களிடம் இருந்த போதை தரும் மாத்திரைகள் 300 எண்ணிக்கையில் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து ராணிப்பேட்டையை சோ்ந்த பால்சுனில் (23), தனுஷ் (19), நவல்பூா் பகுதியைச் சோ்ந்த முகமதுஅமீன் (19) எனும் அந்த மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த மூவரும் 12-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்து வந்துள்ளனா். இவா்களுக்கு கா்நாடக மாநிலம் பெங்களூருவை சோ்ந்த நபரின் தொடா்பு கிடைத்ததை அடுத்து அவா் மூலம் பெங்களுருவில் இருந்து கூரியா் மூலம் போதை மாத்திரைகளை வரவழைத்து அதை ராணிப்பேட்டை பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு விநியோகித்துள்ளனா். மூவரையும் கைது செய்த போலீஸாா், இந்த மாத்திரை விநியோகம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT