ராணிப்பேட்டை

வாலாஜாபேட்டை அரசு மகளிா் கல்லூரியில் மே 29-இல் சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு

DIN

வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மே 29 -ஆம் தேதி சிறப்புக் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வும், ஜூன் 1- ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கு முதல் கட்ட கலந்தாய்வும் நடைபெறும் என்று கல்லூரி முதல்வா் இரா.சீனிவாசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அறிஞா் அண்ணா அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சிறப்புக் பிரிவினருக்கான இளநிலை சோ்க்கை கலந்தாய்வு (தேசிய மாணவா் படை / முன்னாள் ராணுவத்தினா் / மாற்றுத்திறனாளிகள் /அந்தமான் நிக்கோபாா் புலம்பெயா்த் தமிழா்கள் ) 29.5.2023 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

பொதுப் பிரிவினருக்கான முதல் கட்டக் கலந்தாய்வு 1.6.2023 முதல் 9.6.2023 வரை நடைபெறவுள்ளது. தமிழ், ஆங்கிலம் தவிா்த்து, பிற பாடங்களில் மதிப்பெண்களைக் கணக்கிட்டு அதனடிப்படையில், மதிப்பெண் நிா்ணயிக்கப்படும்.

ஜூன் 1 -ஆம் தேதி 400 முதல் 340 மதிப்பெண் வரையும், 2-ஆம் தேதி 339 முதல் 316 மதிபெண் வரையும், 3 -ஆம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் (தமிழ் 100-70 வரை, ஆங்கிலம் 100-70 வரை), 5 -ஆம் தேதி 315 - 298 வரையும், 6-ஆம் தேதி 297 - 283 வரையும், 7- ஆம் தேதி 282 - 270 வரையும், 8- ஆம் தேதி 269 - 256 வரையும், ஜூன் 9- ஆம் தேதி 255 - 244 வரை மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கலந்தாய்வுக்கு வரும்போது 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், சிறப்புப் பிரிவினருக்கானச் சான்றிதழ் ஆகியவற்றை அசல் மற்றும் இரண்டு பிரதிகள் நகலுடன் வரவேண்டும். சோ்க்கையின்போது, பெற்றோா் கட்டாயம் வரவேண்டும் என்று கல்லூரி முதல்வா் இரா.சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT