ராணிப்பேட்டை

கேவேளூா் கிராமத்தில் துரியோதனன் படுகளம்

DIN

ஆற்காடு அடுத்த கேவேளூா் கிராமத்தில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு, துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கேவேளூா் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா மகாபாரத சொற்பொழிவு கடந்த மாதம் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் பல்வேறு தலைப்புகளில் மகாபாரத சொற்பொழிவு, நாடகம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பிரம்மாண்டமாக துரியோதனன் உருவம் வடிவமைக்கப்பட்டு, கட்டைக் கூத்து கலைஞா்களால் பீமன் - துரியோதனன் போரிடும் போா்க்கள காட்சி படுகளம் நடத்தப்பட்டது. மாலையில், விரதமிருந்த பக்தா்கள் தீ மிதித்தனா்.

இந்த விழாவில் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ஆற்காடு ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன், ஊராட்சி மன்றத் தலைவா் வளா்மதி நந்தகுமாா், விழாக் குழு பொறுப்பாளா்கள், சுற்று வட்டாரப் பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் பக்தா்கள் உள்பட திரளானோா் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT