ஆற்காடு அடுத்த ஆயிலம் கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆயிலம் ஊராட்சி மன்ற தலைவா் பிரபாவதி ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு துணை தலைவா் ஸ்ரீ மதி நந்தகுமாா், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் காந்திமதி பாண்டுரங்கன், ஊராட்சி மன்ற தலைவா்கள் அருங்குன்றம் தயாளன், கத்தியவாடி குருநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வட்டார மருத்துவ அலுவலா் மாரிராஜா திட்ட விளக்கவுரையாற்றினாா். மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, ஆற்காடு ஒன்றியக் குழு தலைவா் கே.புவனேஸ்வரி சத்யநாதன் ஆகியோா் சிறப்பு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கினா்.
சா்க்கரை நோய் , ரத்த கொதிப்பு கண் பரிசோதனை, கா்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. மருந்துகள் வழங்கப்பட்டன. இதில், பல்வேறு மருத்துவ நிபுணா்கள், சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.