ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் நவ. 21-இல் முன்னாள் படை வீரா்களுக்கான குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டையில் வரும் 21-ஆம் தேதி முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம்,

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் வரும் 21-ஆம் தேதி முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம், தொழில்முனைவோா் கருத்தரங்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம் மற்றும் தொழில்முனைவோா் கருத்தரங்கு கூட்டம் வரும் வியாழக்கிழமை (நவ. 21) காலை 11 மணியளவில், மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் குறைதீா் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இதில், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் தங்களது படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் இரண்டு நகல்களுடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து குறைகளைத் தெரிவித்து பயனடையலாம்.

திருப்பூா் மக்களவை உறுப்பினா் மக்களிடம் குறைகேட்பு

கடைகளில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

தாம்பரம், விழுப்புரம் இடையே 2 மெமு ரயில்கள் பகுதியளவு ரத்து

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம்: தரவு தளத்தில் நவ.15-க்குள் விவசாயிகள் பதிவு செய்யலாம்

பழனி சண்முகநதியில் 12 டன் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT