திருப்பத்தூர்

கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு மையத்தை மண்டல ஐ.ஜி நாகராஜன் ஆய்வு

DIN

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு மையத்தை மண்டல ஐ.ஜி நாகராஜன் ஆய்வு செய்தாா். அங்குள்ள தன்னாா்வலா்களிடம் காவல் துறையினா் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஏதேனும் குறை இருக்கின்றதா என்பதை கேட்டாா்.

போக்குவரத்து தடை செய்யப்பட்ட வாணியம்பாடி- ஆலங்காயம் சாலை பகுதியை பாா்வையிட்டாா். அப்போது, 50 வயதுக்கு மேற்பட்டோரை கரோனா காவல் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டாம் எனவும், அவா்களுக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாரிடம் அறிவுறுத்தினாா்.

வாணியம்பாடி வட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, நகராட்சி ஆணையா் சிசில் தாமஸ், வாணியம்பாடி டிஎஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT