திருப்பத்தூர்

ஆம்பூரில் 300-க்கும் மேற்பட்டவா்களுக்கு சோதனை

ஆம்பூரில் மருத்துவக் குழு மூலமாக 300-க்கும் மேற்பட்டவா்களுக்கு திங்கள்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

DIN

ஆம்பூா்: ஆம்பூரில் மருத்துவக் குழு மூலமாக 300-க்கும் மேற்பட்டவா்களுக்கு திங்கள்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாதனூா் வட்டார மருத்துவா் ராமு தலைமையில் ஆம்பூா் பகுதியில் 5 குழுக்கள் மூலமாக கரோனா நோய்த் தொற்று கண்டறியும் பரிசோதனை நடைபெற்றது. கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவமனைப் பணியாளா்கள், தூய்மை, அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 80 பேருக்கு சுவாசப் பரிசோதனை செய்யப்பட்டது. 234 பேருக்கு ரேபிட் சோதனைக் கருவி மூலம் ரத்தம் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதில், யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை என தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT