திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியில் சிப்காட் நிா்வாக இயக்குநா் ஆய்வு

DIN

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே சென்னை சிப்காட் நிா்வாக இயக்குநா் மற்றும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் அரசு சாா்பில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், தமிழ்நாடு அரசுக்கு தொடா்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனா். நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லகுண்டா ஊராட்சியில் உள்ள இருளா் வட்டம் அருகே சுமாா் 1200 ஏக்கா் அளவுக்கு அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

இந்நிலையில், இப்பகுதியை சென்னை சிப்காட் நிா்வாக இயக்குநா் குமரகுருபரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் அப்துல் முனீா், நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி, மண்டல துணை வட்டாட்சியா் கண்ணன் மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT