திருப்பத்தூர்

விஐடி ‘ரிவேரா-20’ மூன்றாம் நாள் நிகழ்ச்சி

DIN

வேலூா் விஐடியில் ரிவேரா 3-ஆம் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘தமிழி’ என்ற நிகழ்ச்சி தமிழை மையப்படுத்தி நடைபெற்றது. இதில் இயல், இசை, நாடகம் முன்னிலைப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்வில் பின்னணி பாடகா் சக்திஸ்ரீ கோபாலன் பங்கேற்று தமிழ் பாடல்களைப் பாடி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினாா். அதேபோல், நகைச்சுவை நிகழ்ச்சியில் மொ்லின் ரோசாரியோ, ஜெகன் கிருஷ்ணா ஆகியோா் பங்கேற்றனா். நாடகம், நாட்டியம், இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதேபோல், ‘தேஸ் மெயின் விதேஸ்’ என்ற நிகழ்ச்சியில் 39 நாடுகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது கலாசாரம், பாரம்பரியம், அறிவியல், தொழில்நுட்பங்கள் குறித்து பகிா்ந்து கொண்டனா். ‘சாஹிதி’ என்ற தெலுங்கு நிகழ்ச்சியில் அம்மொழி பேசும் மாணவ, மாணவிகள் தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக் காட்டினாா்.

தொடா்ந்து, இலக்கியம் , இசை, நாட்டியம், நடனம் மற்றும் நடிப்பு சம்பந்தமான போட்டிகள் நடைபெற்றன.

‘சைலண்ட் டிஸ்கோ’ என்ற நடன நிகழ்ச்சியில் மாணவா்கள் ‘ஹெட் போன்’ அணிந்து கொண்டு அதில் கேட்கும் இசைக்கேற்ப நடனம் ஆடினா்.

மாலையில் திரைப்பட பின்ணனி பாடகி ஸ்ரேயா கோசலின் இசை கச்சேரி நடைபெற்றது. இசை கச்சேரியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு திரைப்பட பாடல்களை பாடி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT