திருப்பத்தூர்

100 படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனை ஆய்வு

DIN

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஆம்பூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி ஆம்பூரில் புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசர தேவை ஏற்படும்பட்சத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அடிப்படை வசதிகள், 100 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை ஏற்படுத்த வருவாய்த் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

அதன்படி வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி ஆம்பூரில் இந்து மேல்நிலைப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் கல்லூரி ஆகிய இடங்களை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தோ்வு செய்யப்படும் இடத்தில் மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைக்குரிய அனைத்து வசதிகள், 100 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT