திருப்பத்தூர்

மே 3-க்குப் பிறகு திருப்பத்தூரில் ஊரடங்கு தளா்வு: அமைச்சா் வீரமணி

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்துக்கு மே 3-ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நிபந்தனைகளில் தளா்வு ஏற்படும் என மாநில வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

உலகில் பல நாடுகள் கரோனா நோய்த் தொற்று குறித்து கவலையின்றி இருந்த நேரத்தில் இத்தொற்று பரவல் தடுப்புக்காக பிரதமா் மோடியும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியும் அரசு அதிகாரிகளிடம் பலமுறை ஆலோசனை நடத்தி ஒரு மாத காலமாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினா். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை அளித்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளா்ச்சி, நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையைச் சோ்ந்த 9 ஆயிரம் அரசு பணியாளா்கள் கரோனா முன்னெச்சரிக்கைப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்த மாவட்டத்தில் ஒரு மாத காலத்தில் 5 ஆயிரம் பேருகு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 18 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவா்களில் 17 போ் வீடு திரும்பிவிட்டனா். ஒருவா் விரைவில் வீடு திரும்புவாா்.

பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே வரும் காலங்களில் கரோனா தாக்கத்தை முழுமையாக முறியடிக்க முடியும். ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் சிறிது சிரமம் இருந்தாலும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT