திருப்பத்தூர்

560 தூய்மை பணியாளா்களுக்கு அரிசி: அமைச்சா் வழங்கினாா்

DIN

கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட 560 தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருள்களை மாநில வணிவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட 39 ஊராட்சிகளில் வீடு, வீடாகச் சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் தொட்டி பராமரிப்பவா்கள், காவலா்கள் என 560 பேருக்கு முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் தனது சொந்த செலவில் வழங்கிய 10 கிலோ அரிசி மற்றும் 5 கிலோ கோதுமை அடங்கிய தொகுப்பை அமைச்சா் கே.சி.வீரமணி வழங்கினாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா், கந்திலி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் க.தயாளன், எஸ்.பிரேமாவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT