திருப்பத்தூர்

உலக குறைப் பிரசவ குழந்தைகள் தின விழிப்புணா்வு

DIN

வாணியம்பாடி: ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்தில் உலக குறைப் பிரசவ குழந்தைகள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் ச.பசுபதி பேசியது:

உலகம் முழுவதும் ஆண்டுக்கு 1.5 கோடி குறைப் பிரசவ குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது 10-இல் ஒரு குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது. ஒரு குழந்தை 37 வாரத்துக்கு குறைவாகப் பிறந்தால் அது குறைப்பிரசவம். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிா்ப்புசக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது.

எனவே, மருத்துவா்கள் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றி உரிய நேரத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும், மருந்துகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். குறைப்பிரசவத்தைத் தடுக்க தமிழக அரசு வழங்கும அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தில் உள்ள ஊட்டச்சத்து பொருள்களைக் கா்ப்பிணிகள் பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

அரசு மருத்துவா்கள் வெங்கடேசன், சுமித்தா, செவிலியா்கள், ஆஷா பணியாளா்கள், கா்ப்பிணிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT